சீனாவில் ட்ரக் ஒன்று ஒரு சிறுவன் மீது ஏறியிறங்கியும் ஒரு சேதமுமின்றி அந்த சிறுவன் தப்பும் வைரல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆறு வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்குமுன் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.
அப்போது அங்கு நின்ற ட்ரக் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் அவனைக் கவனிக்காமலே ஏறுகிறார்கள்.
ட்ரக் புறப்பட்டு அவனை மோதித் தள்ளிவிட்டு தொடந்து நகர்கிறது. ட்ரக்கின் பின் புற சக்கரங்களும் அவன் மீது ஏறியிறங்கும் காட்சி காண்போரை பதறச் செய்கிறது.
வேன் சென்றதும் அந்த சிறுவன் எதுவுமே நடவாதது போல அமர்ந்திருக்கிறான். அவனது பெற்றோர் பதறியடித்து ஓடி வந்து அவனைத் தூக்குகிறார்கள்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனது உடலில் ஏற்பட்டுள்ள சிறு சிராய்ப்புகள் தவிர அவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் CCTV காட்சிகளை ஆராய்ந்த பொலிசார், கவனக் குறைவாக வாகனத்தை இயக்கிய அந்த ட்ரக்கின் வாகன ஓட்டி மீதுதான் தவறு எனக்கூறி சிறுவனின் மருத்துவ செலவுகளை அவர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.