மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பைக்கு அருகில் இருக்கும் ஐரோலி பகுதியை சார்ந்தவர் ராமஷிஸ் யாதவ் (வயது 47). தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த இவர் சுமார் இரண்டு முறை கவுன்சிலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரின் மீது அதே பகுதியில் இருக்கும் மாநகராட்சி பள்ளியை சார்ந்த ஆசிரியை ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர். அந்த புகாரில் அவர் தெரிவித்தாவது., கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பள்ளியில் ஆசிரியர் கூட்டமானது நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வருகை தந்திருந்த கவுன்சிலர் ராமாசிஸ் என்னிடம் இணக்கமான முறையில் பேசியதால்., நல்லெண்ண அடிப்படையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில்., வேலை விசயத்திற்காக கவுன்சிலர் ராமாசிஸை சந்திக்க சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் ஆசிரியையை வலுக்கட்டாயமாக பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும்., அந்த காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பிற இடங்களுக்கும் அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து யாரிடமும் கூறும் பட்சத்தில் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
ஒரு சமயத்திற்கு மேலாக இந்த கொடுமைகளை பொறுக்க முடியாத பெண்., காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு., கவுன்சிலரை கைது செய்து அவரது அலைபேசியை தடவியல் காவல் துறையினருக்கு அனுப்பி விட்டு பரிசோதித்து வருகின்றனர்.