தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த அவர்,
நாட்டில் கொரோனா தொற்றானது குறிப்பிடத்தக்களவு மேலும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு நாடு முடக்கப்படுவது கடினம் எனில், குறைந்ததது ஒரு மாதத்திற்காவது ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்பட வேண்டும். இல்லை எனில் நிலைமை மோசமாகிவிடும்.
அதேபோன்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில், இருந்து அடுத்த கட்டத்திற்கு கொரோனா வைரஸ் விரிவடையும் அபாயத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.