உருளைக்கிழங்கில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், விட்டமின் A, B, C, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
உருளைக் கிழங்கில் ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது அதிகப்படியான உடல் பருமனை ஏற்படுத்துகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில், உருளைக் கிழங்கை அதன் தோலுடன் சேர்த்து தினமும் சாப்பிட்டால், நமது உடலை தாக்கும் பல வகையான நோய்களில் இருந்து தடுத்து நம்மை பாதுகாக்கிறது.
தோலுடன் உருளைகிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- உருளைக்கிழங்கின் தோலில் லெக்டின் என்னும் சத்துக்கள் மிகுந்த பொருட்கள் உள்ளது. இது நமது உடலின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய்கள் நம்மை தாக்காமல் தடுக்கிறது.
- உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் 2 டீஸ்பூன் அளவு குடித்து வந்தால், வாதநோயின் வலியில் இருந்தும் உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
- உருளைக்கிழங்கை தோலுடன் தினமும் சாப்பிட்டு வந்தால், நமத் உடலில் உள்ள உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடல் எடையை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
- உருளைக்கிழங்கில் இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இவை நமது உடம்பில் உள்ள எலும்புகளின் வலிமையை அதிகமாக்குகிறது.
- உருளைக்கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த கிழங்கை தோலுடன் சாப்பிடுவதால், இது நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.
- உருளைக்கிழங்கில் நமது இதய ஆரோக்கியத்திற்கு தேவையான பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே உருளைக்கிழங்கை சாப்பிடுவதால், இதய நோய்கள் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
- நமது உடம்பில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து சருமத்தை சுருக்கமின்றி அழகாக வெளிக்காட்ட விட்டமின் C ஆனது உருளைக்கிழங்கின் தோலில் உள்ளது.
- உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவதால், அதில் உள்ள சத்துக்கள் நமது உடம்பின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.