யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் உண்மையான தாக்குதலாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை திங்கள்கிழமை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியை இலக்கு வைத்த தாக்குதல் நீதித்துறை மீதான அச்சுறுத்தாகும். அதனைத் திட்டமிட்டுச் செய்தோரை நீதிக்கும் முன் நிறுத்தும் பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.
னவே உண்மையான தாக்குதலாளியைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தப் பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை வலியுறுத்தி நாளை திங்கள்கிழமை வடக்கு மாகாணச் சட்டத்தரணிகள் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகமாட்டார்கள் என்று யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் நேற்றிரவு அறிவித்தது.