முன்னாள் அமைச்சரின் வீட்டில் சமையல்காரர் மரணம்!!

D

முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான விடுமுறை விடுதியில் சமையல்காரராக செயற்பட்ட நபர் உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த நபரின் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தமை தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சமையல்காரராக வந்த காலி பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் அனுராதபுரம், மாத்தளை பிரதான வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சொந்தமான விடுமுறை விடுதியில் சமையல்காரராக சேவை செய்துள்ளதாகவும், 21ஆம் திகதி அங்கு விருந்து ஒன்று இடம்பெற்றுள்ளாதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு அடுத்த நாள் அதிகாலை விருந்து நிறைவடைந்த பின்னர் அவர் விடுதியின் மேல் மாடி தரையில் நித்திரைக்கு சென்றுள்ளார்.

அவர் உறங்கிய இடத்தில் பாதுகாப்பு வேலி எதுவும் காணப்படவில்லை. மேல் மாடியில் இருந்து 12ஆம் மாடிக்கு விழுந்தமையினால் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்ற போதிலும் யாராவது அவரை இழுத்து கீழே தள்ளியிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இது கொலையாக இருக்காலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.