அமெரிக்காவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்று எட்டு பிணங்களுடன் சுற்றியுள்ளது.
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்று வழக்கம் போல் சரக்கு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
அப்போது லாரிக்குள் இருந்த சிலர் ஓட்டுனரிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத லாரி ஓட்டுனர், சரக்கு லாரிக்குள் எப்படி மனிதர்கள் என்று அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக லாரி இருக்கும் பகுதிக்கு வந்த பொலிசார் லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது லாரிக்குள் 38 பேர் இருந்துள்ளதாகவும், அதில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் 8 பேர் இறந்துகிடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.