யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு கொழும்பில் போன்று யாழிலும் சீ.சீ.டி.வி கெமராக்கள்

y1

தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இந்த நிலையிலேயே நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கொழும்பில் போன்று யாழிலும் அனைத்து இடங்களிலும் சீ.சீ.டி.வி கெமராக்கள் பொருத்தப்பட்டால் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போது ஆயுதக்குழுக்கள் எதுவும் இல்லை. அவ்வாறிருக்க நீதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் சாகல ரத்நாயக்க விரைவில் உரையாற்றுவார். இந்த சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்தார்.

பொலிஸாரின் துப்பாக்கியை பறித்தே இந்த துப்பாக்கிச்சூட்டை குற்றவாளிகள் நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவருக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கின்றேன். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க விசேட உரையாற்றுவார் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.