மகளிருக்கான ஐ.பி.எல். போட்டிகளை தொடங்குவதற்கான சரியான தருணம் உருவாகியுள்ளது என இந்திய மகளிர் அணியின் தலைவி மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த உலகக் கிண்ண போட்டியில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் மகளிர் கிரிக்கெட்டைப் பலமடங்கு முன்னெடுத்துச் செல்லும்.
மகளிர் பிக் பாஷ் லீக்கில் விளையாடிய இந்திய வீராங்கனைகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற லீக் போட்டிகளில் அதிகமாக விளையாடும்போது நல்ல அனுபவம் கிடைக்கும். திறமையும் மெருகேறும். எனவே மகளிர் ஐ.பி.எல். போட்டிகளை தொடங்க இதுவே சரியான தருணம்” என்றார்.