மனித உரிமை விடயத்தில் இலங்கை மீதான அழுத்தம் தொடரும்: பிரித்தானியா

downloadமனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கை மீது பிரித்தானியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் புதிய தலைவராக தெரிவிசெய்யப்பட்டுள்ள போல் ஸ்கலி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல் நீடிப்பதாக தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் இப்பிரச்சினையை உயர்த்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ஜெனீவா பிரேரணை அமுலாக்க விடயத்திலும், மறுசீரமைப்பு விடயத்திலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விடயத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.