இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு டயர்ட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி கூட இப்போது அரிசி சாதம் சாப்பிட்டுக் கொண்டுள்ளார்.

 

India's captain Mahendra Singh Dhoni (R) and teammate Virat Kohli look on ahead of the start of the third T20 cricket match between India and South Africa at The Eden Gardens Stadium in Kolkata on October 8, 2015. AFP PHOTO / DIBYANGSHU SARKAR ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE--        (Photo credit should read DIBYANGSHU SARKAR/AFP/Getty Images)

கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு அங்குள்ள வெப்ப நிலையை பொருத்து டயர்ட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுக்காத விராட் கோஹ்லி கூட இப்போது அரிசி சாதம் சாப்பிட்டுக் கொண்டுள்ளார். புவனேஸ்வர்குமாரும், உமேஷ் யாதவும், சோற்றில் தயிரை கலந்து கட்டி சாப்பிட்டுக்கொண்டுள்ளனர். வெப்பமான தட்பவெப்பம் நிலவுவதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழக்கத்தைவிட சற்று மாறுபட்ட டயர்ட் சாப்பாடு தரப்படுகிறது. இந்திய வீரர்கள் அடுத்த மாதம் இறுதிவரை இலங்கையில் தொடர்ந்து 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டியுள்ள நிலையில், வீரர்களின் டயர்ட் லிஸ்டை இங்கே பாருங்கள்.

சிற்றுண்டி

காலை 8மணிக்கு சிற்றுண்டி வழங்கப்படுகிறது. அன்னாசி, வாழை, ஆரஞ்சு, அவோகடோ, கார்ன் ப்ளாக், கோதுமை ப்ளாக், சோகோ போப்ஸ், உலர்ந்த திராட்சை, ஆடை நீக்கிய பால், பாதாம், ஜாம், செயற்கை வெண்ணை, தேன், ஆரஞ்சு பழச்சாறு, பிரவுன் பிரெட், பலதானியம், கொழும்பு குறைந்த வெண்ணை, துண்டாக்கப்பட்ட சிக்கன், மீன், அவித்த முட்டை, வெட்டப்பட்ட தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், லெட்யூஸ், டீ, காபி, கிரீன் டீ. இந்த உணவுகளில் விரும்பியதை சாப்பிடலாம்.

4

மதிய உணவு

மதிய உணவு மதியம் 12 மணிக்கு வழங்கப்படுகிறது. மக்காச்சோள சூப், பிரெட் ரோல், நான், காய்கறி சலாட், பீட்ருட் சலாட், சோறு, தயிர் சோறு, சிக்கன் கபாப், சிக்கன் மஞ்சூரியன், டால் நவ்ரத்னா, பிண்டி, அவித்த கா்யகறிகள், கொழுப்பு குறைந்த தயிர், அப்பளம், இந்திய ஊறுகாய், வாழைப்பழம், ப்ரூட் சலாட், யோக்கர்ட், கிங் கோக்கனட் வாட்டர்.

23

மாலை டீ

மாலை 2.30 மணிக்கு தந்தூரி சிக்கன் சான்ட்விச் அல்லது மட்டன் ரேப்ஸ், ப்ரூட் கேக், குக்கீஸ், பிஸ்கட்ஸ், டீ, காபி, கிரீன் டீ. இவற்றில் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

coffee

இரவு சாப்பாடு

போட்டிக்கு  பிறகு மாலை 5 மணிக்கு உணவு வழங்கப்படுகிறது. சோறு, சிக்கன் மகானி, மஞ்சள் பருப்பு, பன்னீர் புர்ஜி, நான், ப்ரூட் பிளாட்டர். ஆகியவை வழங்கப்படும். இதுதவிர இந்திய உணவு வகைகளை சாப்பிடவும் வசதி உள்ளது. உதாரணத்திற்கு கார்ன் பாலக், உருளை மேதி, சிக்கன் தந்தூர், பனஅனீர் லாபப்டார் போன்றவற்றை சாப்பிடலாம்.
16132