எண்ணெய் களஞ்சியத்தை முழுமையான பகுதியின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

gas_b1

ஒபேசேகர புர பிரதேசத்தின் நுழைவாயில் ஒன்றின் ஊடாக இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு பிரிவு தற்போது கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

தற்போது எண்ணெய் களஞ்சியத்தை முழுமையான பகுதியின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியிலுள்ள ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் குறித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானிக்கு ஜனாதிபதியின் கையொப்பம் கிடைத்திருந்ததாக அரசாங்க அச்சகம் தெரிவித்திருந்தது.

பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த சேவையினை வழங்குவதற்கு இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் ஆயத்தமாகினர்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் உட்பட பல விடயங்களை அடைப்படையாக கொண்டு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றிரவு நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் நீண்ட வரிசை ஒன்று காணப்பட்டுள்ளது.

 

எப்படியிருப்பினும் எரிபொருள் வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அறையில் இருந்து எரிபொருள் கொண்டுவரும் நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஏற்பட்டால் பஸ் பயணங்கள் நிறுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தூர இடங்களுக்கான பஸ் பயண சேவைகள் உரிய நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் பல சேவைகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.