பிரபாகரனை தோற்கடிப்பதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் ஐதேக கையெழுத்திட்டதே பிரதான காரணம் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1987ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களினால் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“தனது தந்தை காமினி திஸாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்திய – இலங்கை உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்த்தனர்.
அந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருக்கவில்லை என்றால், பிரபாகரனை தோற்கடிக்க இலங்கைக்கு இந்தியா உதவியிருக்காது.
1987ம் ஆண்டுக்கு பின்னர் பிரபாகரனை தோற்கடிப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இந்தியா எதிர்ப்பு வெளியிடவில்லை.
பிரபாகரனுக்கு இந்தியா உதவியிருந்தால், இலங்கையில் பயங்கரவாதம் என்பது மிக மோசமாக இருந்திருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.