நீதிபதி மீதான துப்பாக்கி பிரயோகம்! சந்தேக நபர் வாக்குமூலம்! வெளிவராத உண்மைகள் (வீடியோ&படங்கள்)

n22

உள்ள வீட்­டில் தண்­ணி­ய­டிச்­சுட்டு (மது­போதை) அந்­தச் சந்­தி­யில் வந்து நின்­றம். பொலிஸ்­கா­ரன் வரேக்க, உனக்கு தைரி­யம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்­துச் சுடடா பார்ப்­பம் என்று மச்­சான் சொன்­னான். பொலிஸ்­கா­ரன்ர துவக்கை எடுக்­கேக்க தெரி­யா­மல் சுடு­பட்­டுட்­டு­து”­ இவ்­வாறு நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­தாக பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த முதன்­மைச் சந்­தே­க­ந­பர், பொலி­ஸில் நேற்­றுச் சர­ண­டைந்து வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில் தெரி­வித்­தார்.

சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பாண நீதி­வான் எஸ்.சதீஸ்­த­ர­னின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­டார். அவரை எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்க நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

நல்­லூ­ரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை 5.15 மணி­ய­ள­வில் துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றி­ருந்­தது. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரது பிஸ்­டலை பறித்தே துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

தன்னை இலக்கு நோக்­கி­ய­தாக இந்­தச் சம்­ப­வம் இருக்­கக் கூடும் என்று சந்­தே­கிப்­ப­தாக நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தெரி­வித்­தி­ருந்­தார். பொலி­ஸார் அதனை மறுத்­தி­ருந்­த­னர்.

சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் இரு­வர் அன்­றி­ரவே கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர்.

முக்­கிய சந்­தே­க­ந­ப­ரைத் தேடி வரு­வ­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர். அவர் வெளி­மா­வட்­டத்­துக்கு தப்­பிச் சென்­றி­ருந்­த­தா­க­வும், அவ­ரைத் தேடி கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீ­வுக்கு சிறப்பு பொலிஸ் குழுக்­கள் சென்­றுள்­ள­தா­க­வும் பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் திடீ­ரென – யாருமே எதிர்­பார்க்­காத நிலை­யில், பொலி­ஸா­ரால் தேடப்­பட்ட முதன்­மைச் சந்­தே­க­ந­பர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை 8.20 மணி­ய­ள­வில் சர­ண­டைந்­தார். அவ­ரி­டம் நேற்று மாலை 5 மணி­வரை வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­டது.

“துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய பின்­னர் பிஸ்­ட­லைக் காட்டி வீதி­யால் வந்­த­வ­ரது ஸ்கூட்­ட­ரைப் பறித்­தேன். ஸ்கூட்­ட­ரில், ஆடி­ய­பா­தம் வீதி கல்­வி­யன்­காட்­டுப் பகு­திக்­குச் சென்று அங்­கி­ருந்து அரி­யா­லைக்­குச் சென்­றேன். அரி­யாலை பேச்சி அம்­மன் கோயி­லுக்­குப் பின்­னால் ஸ்கூட்­ட­ரைப் போட்­டு­விட்டு திரு­ந­கர் பகு­தி­யில் உள்ள பெரி­யம்மா வீட்­டுக்­குச் சென்­றேன்.

அங்கு பெரி­யம்­மா­வி­டம், “போதை­யில் பொலி­ஸூக்கு அடித்­துப்­போட்­டன். பொலிஸ் என்­னைத் தேடுது” என்று சொன்­னேன். பெரி­யம்மா வீட்­டி­லேயே உடையை மாற்­றி­ விட்டு, ஓட்­டு­ம­டம் பகு­தி­யில் உள்ள கோம்­ப­யன்­ம­ணல் சுட­லை­யில் அன்­றைய இர­வைக் கழித்­தேன்.

மறு­நாள் பகல் நாவந்­து­றை­யில் உள்ள உற­வி­னர் வீட்­டில் நின்­றேன். அன்­றி­ரவு கொட்­ட­டி­யில் உள்ள மாமா­வின் வீட்­டுக்­குச் சென்­றேன். நல்­லூ­ரில் நடந்த சம்­ப­வத்தை மாமா அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும்.

ஏனெ­னில், என்னை அங்கு கண்­ட­தும் மாமா உட­ன­டி­யாக எனது அப்­பா­வுக்கு அலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி நான் வந்­த­தைக் கூறி­னார்.

மாமா “என்னை பொலி­ஸில் சர­ண­டை­யு­மாறு கூறி­னார். அதன்­படி மாமா­வு­டன் வந்து பொலி­ஸில் சர­ண­டைந்­தேன்” என்று சந்­தே­க­ந­பர் வாக்­கு­மூ­லம் வழங்­கி­ய­தா­கப் பொலிஸ் தரப்­புத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

வாக்­கு­மூ­லம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட பின்­னர், திரு­ந­க­ரில் உள்ள சந்­தே­க­ந­ப­ரின் பெரி­யம்மா வீட்­டுக்கு பொலிஸ் வாக­னத்­தில் கறுப்­புத்­து­ணி­யால் மூடிய நிலை­யில் சந்­தே­க­ந­பர் அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

துப்­பாக்­கிச் சூடு நடத்­தும்­போது அணிந்­தி­ருந்த உடை­கள் உள்­ளிட்ட சில பொருள்­கள் மீட்­கப்­பட்­டன.

பின்­னர் அவர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து வரப்­பட்­டார். அத­னைத் தொடர்ந்து யாழ்ப்­பா­ணம் நீதி­வா­னின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­தில் சந்­தே­க­ந­பர் முற்­ப­டுத்­தப்­பட்­டார்.

சந்­தே­க­ந­பர் யார்?

சந்­தே­க­ந­பர், சிவ­ராசா ஜெயந்­தன் (வயது–39). இவர் 1995ஆம் ஆண்­டி­லி­ருந்து 1998ஆம் ஆண்டு வரை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் ‘சைபர்’ படை­ய­ணி­யில் இருந்­துள்­ளார்.

1998ஆம் ஆண்டு விடு­த­லைப் புலி­கள் அமைப்­பி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான கடி­தம் கொடுத்­துள்­ளார்.

அமைப்­பி­லி­ருந்து இடை­யில் வில­கு­வ­தன் கார­ண­மாக விடு­த­லைப் புலி­கள் தண்­டனை கொடுத்­துள்­ள­னர்.

இர­ணை­மடு முகா­மில் சமை­யல் வேலை செய்­யும் தண்­டனை அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

2000ஆம் ஆண்டு முழங்­கா­வில் பகு­தி­யில் வசித்­துள்­ளார்.

முழங்­கா­வி­லில், யாழ்ப்­பா­ணம் மண்­கும்­பா­னைச் சேர்ந்த பெண்ணை திரு­ம­ணம் முடித்­துள்­ளார். இவ­ருக்கு 4 பிள்­ளை­கள் உள்­ள­னர்.

2002ஆம் ஆண்டு மண்­கும்­பா­னில் சந்­தே­க­ந­பர் குடும்­பத்­து­டன் குடி­யே­றி­யுள்­ளார். ஆரம்­பத்­தில் கூலி வேலை­கள் செய்­துள்­ளார்.

பின்­னர் ஐஸ்­ பழ வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். இதன்­போது வேல­ணை­யில் மற்­றொரு திரு­ம­ணம் செய்­துள்­ளார். இவ­ருக்­கும் 4 பிள்­ளை­கள் பிறந்­துள்­ள­னர்.

வேலணை பிரிவு 4ஆம் வட்­டா­ரத்­தில் தொடர்ந்து வசித்து வரு­கின்­றார்.

யாழ்ப்­பா­ணம் – குறி­காட்­டு­வான் பேருந்­துச் சேவை­யில் சார­தி­யாக பணி­யாற்றி வரு­கின்­றார்.