அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்த நிலையில், அது , இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரான மகிந்த சமரசிங்கவால் சபைக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா 112 கோடி அமெரிக்க டொலர்கள்வரை முதலீடுகளைச் செய்யவுள்ளது.
இலங்கைத் துறைமுக அதிகாரசபைக்கும், சைனா மேர்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பனி லிமிட்டெட் என்ற கம்பனிக்குமிடையே கைச்சாத்திடப்படவுள்ள குறித்த ஒப்பந்தத்தின் காலம் 99 வருடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஒப்பந்தம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ளது.