இராணுவ முகாமை அகற்றுவதற்கு பணம் வேண்டும் என்று இராணுவத்தினர்

கேப்பாப்புலவில் 111 ஏக்கரில் நிலைகொண்டுள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கு பணம் வேண்டும் என்று இராணுவத்தினர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகாம்களை அகற்றி மக்கள் காணிகளை விடுவிப்பதாக ஏற்கனவே பணம் வாங்கிய இராணுவத்தினர், 180 ஏக்கர் காட்டுப்பகுதியையே விடுவித்திருந்தனர். இந்த நிலையிலேயே மீண்டும் முகாம்களை இடமாற்ற பணம் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்புலவு மக்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையில் மீள்குடியேற்ற அமைச்சில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது மக்கள், தமது காணி விடுவிப்புக்காக இனிமேலும் பொறுமையாக இருக்கமுடியாது என்று தெரிவித்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

இராணுவத்தினர் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு சம்மதம் என்றும், அந்த முகாம்களை இடமாற்ற பணம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், எனது அமைச்சின் ஊடாக அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுத்தருவதாகப் பதில் வழங்கியுள்ளார்.

பணம் கிடைக்கப்பெற்றால் இந்த வருடஇறுதிக்குள் முகாம்களை இடமாற்றுவதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இராணுவத்தினரின் இந்தப் பதிலை மக்கள் ஏற்கவில்லை. அவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

இதேவேளை, கேப்பாப்பிலவில் 180 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக அந்தக் காணியிலுள்ள முகாமை இடமாற்ற பணம் தேவை என்று இராணுவம் கேட்டுக் கொண்டதுக்கமைவாக மீள்குடியேற்ற அமைச்சு அந்தப் பணத்தை வழங்கியிருந்தது.

அதற்கமைவாக 180 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் விடுவித்தனர். அந்தக் காணிகள் மக்களின் குடியிருப்புக் காணிகளாக அல்லாமல் காட்டுப்பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)