150 வது நாளாக தொடரும் சத்தியாகிரக போராட்டம் வரும் ஓகஸ்ட் 2ம் திகதி மட்டும் நீடிப்பு

hg

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 150 ஆவது நாளில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படவிருந்த போதும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நீடிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 150 நாட்களாக காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தகரக்கொட்டிலிட்டு வேலையற்ற பட்டதாரிகள் அரச தொழில் கேட்டு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழி மற்றும் மத்திய அமைச்சரவை வழங்கிய தீர்மானம் என்பன இவர்களை போராட்டமுடிவுக்கு கொண்டுவர காரணிகளாக அமைந்திருந்தும் அவற்றை நம்பமுடியாது எனவே 2 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 250 இறகு மேற்பட்ட தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள் ஆண்பெண் இருபாலாரும் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நாட்களில் நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் மாவை சேனாதிராஜா அமைச்சர் ரவூப்ஹக்கீம் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் பாராளுமன்ற குழுவின் தலைவரான பேராசிரியர் மாரசிங்க போன்றோர் பட்டதாரிகளைச் சந்தித்துள்ளனர்.

எனினும் யாரும் சரியான தீர்வை வழங்காத காரணத்தினால் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. இடையில் வீசிய மினிசூறாவளியில் கொட்டில் தகரங்கள் தூக்கிவீசப்பட்டன.எனினும் மறுநாளே அவர்கள் சரிசெய்து கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இறுதியாக கிழக்குமாகாண அரசு மத்திய அமைச்சரவை ஆகியன வழங்கிய உறுதிமொழிகளை ஏற்று தற்காலிகமாக 150 நாள் தொடர் போராட்டத்தை இன்றைய தினம் நிறைவுக்குகொண்டுவரவிருந்தும் பின்னர் அது நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர்கள் சூழவிருந்த கறுத்தக் கொடி கட்டப்பட்ட கம்பங்களையும் அகற்றுவதையும் அவர்களுக்குள் கூடிக்கலந்துரையாடுவதையும் காணமுடிந்தது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் எனும் கருத்துக்களோடு சிலரும் மேலும் வாக்குறுதிகளை நம்பமுடியாது போராட்டத்தை கைவிடாது தொடரவேண்டும் எனும் கருத்துக்களோடு சிலரும் காணப்பட்டனராயினும்.

இறுதியில் 2 மணிநேர கலந்துரையாடலின் பின்னர் பிற்பகல் 4 மணியளவில் 2ஆம் திகதிவரை நீடிப்பது என்ற முடிவுக்கு வந்தது.

மேலும், பட்டதாரிகள் சங்கத்தலைவர்களான நசுறுதீன் திலிபன் உள்ளிட்ட முக்கிய பட்டதாரி பிரமுகர்களும் சுமார் 100 பட்டதாரிகளும் இன்று சமூகமளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.