புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்யத் தயார் ஆனால் நாட்டில் பாதுகாப்பு இல்லை

புலம்பெயர்ந்திருக்கும் எமது ஈழத் தமிழ் உறவுகள் இந்த நாட்டில் முதலீடுகளைச் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு இலங்கையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடந்த விவாதம் ஒன்றின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் மன்றில் உரையாற்றிய அவர்,

புலம்பெயர்ந்திருக்கும் ஈழத் தமிழர்கள் உலகம் முழுவதும் 12 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அந்நியச் செலாவணியை கொண்டுவரத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் இந்த நாட்டில் அவர்களுக்கான பாதுகாப்பு இல்லை. ஒரு தொழில் முயற்சியை செய்ய முடியாமல் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.