யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்படவுள்ளது.
சரத் ஹேமச்சந்திர என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் அண்மையில் யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பதவியை வழங்கியுள்ளார்.
இவருக்கு பதவி உயர்வுடன் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சரத் ஹேமச்சந்திரவின் மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.