கொழும்பில் இன்று சீன இராணுவத்தின் ஆண்டு விழா

cheenaசீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 90 ஆவது ஆண்டு விழா இன்று சிறிலங்காவிலும் கொண்டாடப்படவுள்ளது. சிறிலங்காவில் உள்ள சீன தூதரகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் காலிமுகத்திடல் விடுதியில் இன்று மாலை 7 மணியளவில், சீன இராணுவத்தின் ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் சிறிலங்காவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த விழாவுக்கு சிறிலங்கா அரச, இராணுவ மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் 400 பேருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.