பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான விடயம்….

நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதுமுள்ள பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு நாளை வெள்ளி(28), சனி(29) மற்றும் ஞாயிறு(30) ஆகிய மூன்று நாட்களில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை நடைபெறாது. அன்றையதினம் மாணவர், பெற்றோர், ஆசிரியர், பழைய மாணவர் மற்றும் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்கள் இணைந்து பாடசாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்கள் சீருடை அல்லது சிரமதானத்துக்கு பொருத்தமான உடைகளை அணிந்துவர அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் மாணவர்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.