உண்மையான சந்தேக நபர் நாட்டைவிட்டு தப்பியோட்டம்? நாடாளுமன்ற உறுப்பினர்!

யாழ்ப்பாணம் நல்லூரில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி இலங்கையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனுமாகிய நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

images (1)

நேற்றைய தினம் பொரளைப் பகுதியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்ததாகக் ,கூறப்படுகிறது.

இது பற்றிக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்‌ஷ, “எமக்கு யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய சூட்டுச் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் தம்மிடம் சடணடைந்துவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன், பொலிஸ் பேச்சாளர் மற்றும் சரணடைந்த நபர் ஆகிய மூன்றுபேரினதும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரண்பட்டதாகவே இருக்கின்றன. எனவே இது தொடர்பான உரிய விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு உண்மையான  குற்றவாளி கைதுசெய்யப்படவேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சம்பவம் குறித்து பொலிஸாரிடம் சரணடைந்த நபர் எதிர்வரும் எட்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.