அண்மையில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆகாயத்தில் இருந்து விழுந்த ஒருவகை திரவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த பாடசாலையின் நிர்வாகத்தை மட்டுமல்ல யாழ் குடாநாட்டிலுள்ள அதிகமானவர்களை அச்சமடைய செய்திருந்தது. காரணம் குறித்த மர்மத் திரவத்தில் அசிற் தன்மையும் இதர சில இரசாயணங்களும் செறிந்திருந்ததாக அந்த திரவத்தை ஆராய்ந்த நிபுணர்கள் தெரிவித்ததாக செய்திகள் கசிந்துள்ளன. ஆனாலும் அந்த உண்மை இன்னமும் வெளியிடப்படாது இரகசியமாகவே உள்ளது.
கடந்த இரண்டு மாதகாலத்தில் மூன்று தடவைகள் இவ்வாறான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக நடைபெற்ற சம்பவத்தினிபோது வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் 18 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது மதிய நேர இடைவேளையின் போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த நேரம் நடைபெற்றுள்ளது. ஆகாயத்தில் இருந்து தரை நோக்கி வந்த மஞ்சள் நிற திரவமொன்று மாணவிகளில் கைகளில் பட்டதினால் உடல் சிவந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டு வைத்திய சாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தி சென்றுள்ளார்.இது குறித்த சம்பவம் தொடர்பில் வெளியான சாதாரண செய்தி
ஆனால் தற்போது இதற்கான பின்னணி ஒன்று கசிந்துள்ளதுடன் அச்செய்தி அனைவரையும் உறையவைத்துள்ளது.
அதாவது குறித்த பாடசாலை பழைய மாணவர் சங்கம் பாடசாலை மைதானத்தை அகலிப்பு செய்யும் நோக்குடன் அருகிலுள்ள காணி ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டு அதற்கான ஆயத்த நகர்வுகளையும் மேற்கொண்டிருந்தது. குறித்த நிலப்பரப்பின் ஒருபரப்பு காணிக்கான பெறுமதியாக ஒரு கோடி ரூபா என நிர்ணயித்து அதற்கான ஒப்பந்தமும் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆனால் அந்தக் காணியை வாங்குவதற்காக அரசியல் செல்வாக்கு மிக்க புள்ளியொன்று அதன் உரிமையாளருடன் தொடர்பு கொண்டு காணிக்காக பரப்பு ஒன்றுக்கு ஒரு கோடி 30 இலட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளது. இதனால் குறித்த காணியின் உரிமையாளர் நிதானம் தவறியவராக தற்போது கணியை பாடசாலைக்கு விற்பனை செய்வதில் இழுத்தடிப்பு செய்துவருகிறார். ஆனாலும் பாடசாலையின் பழைய மாணவர்களது ஆழுத்தம் காரணமாக காணியை வழங்க உரிமையாளர் ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் அந்த காணியை மையப்படுத்தியதாக பல அச்சுறுத்தல்களும் பாடசாலை சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.
அவ்வாறான அச்சுறுத்தல்களின் பின்னணியில் தான் குறித்த பாடசாலையின் மைதானத்தை மையப்படுத்தியதாக கடந்த இரு மாதங்களில் மூன்று தடவைகள் இந்த மர்மமான திரவம் வீழ்ந்துள்ளது.
பாடசாலையின் அபிவிருத்தியில் ஒரு பகுதியினர் இருக்க, இன்னொரு தரப்பு அக்காணியில் ஒரு ஆடம்பர உல்லாச விடுதி அமைப்பதற்காக முயற்சித்து இந்த காணியை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்காணி யாழ் நகரை மையப்படுதிதியுள்ளதாலும் ஒரு பெண்கள் பாடசாலையை மையப்படுத்தியிருப்துமே காரணம் என தெரிவிக்கப்படகின்றது.
அதற்கான காரணமாக யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் பலரை குறித்த உல்லாச விடுதியில் மறைகமுகமாக உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குறித்த ஆடம்பர விடுதிக்கு மாணவிகளை உள்வாங்குவது சுலபமாக இருக்கும் என்தால் அந்த மாணவிகளைக்கொண்டு வெளிநாட்டவர்களுக்கும் உள்ளாட்டு செல்வந்தர்களுக்கும் காம சுகமளிக் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காகவே இந்த இடத்தை அந்த அரசியல் பலம் கொண்ட பெரும்புள்ளி அக்காணியை கொள்வனவு செய்ய திட்டமிடுகிறார் என்றும் பாடசாலை உள்ளக வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிகின்றன.
இதனால்தான் குறித்த திரவம் மர்மமான வகையில் அதி அழுத்தம் கொண்ட பம்பிகள் மூலம் அயலிலுள்ள மறைவான பகுதியகளிலிருந்து தெளிக்கப்படுவதாக உறுதிபட தெரிவிக்கின்றனர் பாடசாலை சமூகம்.