அக்கரப்பத்தனை – போபத்தலாவ மெனிக்பாலம பகுதியிலிருந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் ஆகரஓயா ஆற்றில் கறுப்பு நிறத்தில் நீர் செல்வதனால் ஆற்றை பாவிக்கும் அந்த பகுதி மக்கள் பல சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தேயிலை தொழிற்சாலை அல்லது கால்நடை பண்ணைகளிலிருந்து இவ்வாறு கழிவுகளை ஆற்றில் கொட்டுவதாக நீரை பாவிக்கும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் கறுப்பு நிறத்தில் நீர் வருவதாகவும் சூழல் மாசடைவதாகவும் நீரை பாவிக்க முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.