சடடவிரோதமாக கப்பலில் அகதிகள் கடத்தப்பட்ட வழக்கு – 4 தமிழர்களையும் விடுவித்தது கனேடிய உயர்நீதிமன்றம்

ம்.வி.ஓசன் லேடி கப்பலில் இலங்கை தமிழ் அகதிகளை கனடாவுக்கு ஏற்றி வந்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நான்கு தமிழர்களும், குற்றவாளிகள் இல்லை என்று பிரிட்டிஷ் கொலம்பிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஆர்னே சில்வர்மன்,  இந்த கடத்தல் நடவடிக்கை ஒருங்கிணைந்த குற்றம் என்பதற்கான சாட்சியங்கள் உள்ள போதிலும், குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் எந்தக் குற்றங்களிலும் தொடர்புபட்டிருந்தார்கள் என்று சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

பிரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பு, கமல்ராஜ் கந்தசாமி, ஜெயச்சந்திரன் கனகராஜ், விக்னராஜா  தேவராஜ் ஆகிய நால்வருமே குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஓசன் லேடி கப்பலில் இவர்கள் கனடாவில் தஞ்சமடைந்திருந்தனர்.

ocean

 

நீதிபதி தீர்ப்பை அறிவித்ததும் இவர்களை புன்னகைத்து சிரித்தபடியே  தமது சட்டவாளர்களுடன் கைகுலுக்கிக் கொண்டனர்.

கனடாவில் அடைக்கலம் தேடும் அகதிகளை இலாப நோக்கில் கடத்துவதற்கு இவர்கள் பொறுப்பாக இருந்தனர் என்று அரசதரப்பு சட்டவாளர் வாதிட்டிருந்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி சில்வர்மன் தெரிவித்தார்.

ஓசன் லேடி கப்பல் 79 தமிழர்களுடன் 2009 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.