அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் அழகிப் பட்டத்தை கடந்த ஆண்டு பெற்றுள்ளார் 91 வயதான கிரைஸ்டினா ஃபார்லி.
1925-ம் ஆண்டு கிழக்கு போலந்தில் பிறந்த கிரைஸ்டினா, கிராமப்புற பகுதியில் ஒரு அன்பான குடும்பத்தில் வளர்ந்தவர் என்றாலும், திடீரென உருவான போர் இவரது குழந்தை பருவத்தையே பாதித்துள்ளது.
கிரஸ்டைனா என்பவரை கிரைஸ்டினா திருமணம் செய்துகொண்டு பிரிட்டனில் குடியேறிய நிலையில், மதுவின் காரணமாக அவரது கணவர் உயிரிழந்தார். கணவர் விட்டுச் சென்ற போது கிரைஸ்டினாவிற்கு அவரது குழந்தைகள் மட்டுமே ஆறுதலாக இருந்தன.
1955-ல் ஒரு ஆர்வத்தில் நான்கு குழந்தைகளுடனும், கையில் சில நூறு டாலர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவில் தனது குழந்தைகளுக்காகவும், தனக்காவும் ஒரு புதிய வாழ்க்கையினை தொடங்கிய அவர், தனது 50வது வயதில் எட் பார்லீ என்பவருடன் மணம் முடித்தார்.
கனெக்டிகட் மாகாணத்தின் உள்ள போலாந்து மக்களிள் நடத்தும் அமைப்புகளில் கிரைஸ்டினா ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறார்.
அமெரிக்காவின் பாரம்பரிய அழகிப்போட்டி குறித்து தாமதமாகவே அறிந்துகொண்ட அவர், தனது 70வது வயதில் முதல்முறையாக “திருமதி கனெக்டிகட் மூத்த அமெரிக்கர்“ என்ற அழகிப்போட்டியில் கலந்துகொண்டார்.
முதல் இரண்டு முயற்சிகள் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றாலும். 2016-ல் முன்றாம் முறையாக முயன்று அழகிப்பட்டத்தை வென்றார்.
“எனது தோல் அழகானது. அதனால் நான் எந்த ஒப்பனையும் செய்ய மாட்டேன். வெறும் உதட்டுச் சாயம் மட்டும் போதுமானது“ என்கிறார் கிரைஸ்டினா ஃபார்லி.
விரைவில் 92 வயதை அடைய உள்ள கிரைஸ்டினா, கடந்த ஆண்டு ` திருமதி கனெக்டிகட் மூத்த அமெரிக்கர்` என்ற அழகிப்பட்டத்தை பெற்றுள்ளார்.
அழகிப் போட்டியினை தான் விரும்புவதற்கான காரணத்தை விவரிக்கும் கிரைஸ்டினா, நீங்கள் 60 வயதை அடைந்துவிட்டாலே உங்களது ஆயுள் முடிந்துவிட்டது என மக்கள் நினைப்பார்கள்.
உங்களால் நடனம் ஆட முடியும், படம் வரைய முடியும் மற்றும் நீங்கள் நினைப்பது அனைத்தையும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கலாம் என்று கூறுகிறார்.