குப்பைத்தொட்டிக்குள் பெண்ணின் சடலம்

dosebin

குப்பை தொட்டிக்குள் இருந்து 37 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பரிசின் மொன்பர்னாஸ் பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு கட்டடத்தின் குப்பை தொட்டிக்குள் இருந்து காவல்துறையினரால் இந்த உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்து வந்த 34 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரி அவருடன் நீண்ட நாட்கள் தொடர்பு எடுக்க முயன்றும் பல நாட்களாக எந்த தகவலும் இல்லாத நிலையில் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார்.

அதேநேரம் குப்பை தொட்டிக்குள் இருந்த உடலமும் நாற்றமடிக்க தொடங்கி உள்ளது.

அத்துடன் ஒரு குப்பை தொட்டியை காணவில்லை என்றும் அந்த கட்டடத்தின் நிர்வாக காவலாளியும் காவற்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் குறித்த இடத்தினை சோதனை செய்ய பொலிசார் குப்பை தொட்டிக்குள் பெண்ணின் சடலம் இருப்பதை கண்டறிந்ததுடன் குறித்த சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஏற்கனவே பல குற்றச்செயல்களை புரிந்து காவல்துறையின் குற்றப்பட்டியலில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.