சிறிலங்காவின் 51 ஆவது தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர

major1

சிறிலங்கா இராணுவத்தின் 51 ஆவது தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இராணுவத் தலைமையகத்தில் நடந்த இந்த நிகழ்வில், மகா சங்கத்தினர் ஆசி வழங்கியதுடன், சிறிலங்கா இராணுவ மூத்த அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர பதவியேற்ற பின்னர், அங்கு திடீரென வந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

1981ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, 35 ஆண்டுகள் இராணுவத்தில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார்.