பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது,
மினுவாங்கொடை தேவலபொல பிரதேசத்தில் தொல்லியல் பொருட்கள் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் மற்றும் விலங்குகளின் சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சிலைகளைக் கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் போன்று சென்ற பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்த பெறுமதி மிக்க சிலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.