நாட்டில் பல பகுதிகளில் முன்னறிவிப்பற்ற திடீர் மின்விநியோகத் தடை ஏற்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் ஸ்தம்பித்துள்ளதால், தேசிய மின்சார கட்டமைப்புக்கு 300 மெகாவோட் மின்சாரம் கிடைக்கப்பெறாதுள்ளது.
இந்த நிலையில், நீர்மின் உற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன. இதன்காரணமாக, திடீர் மின்தடை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.