உருகுணை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வீரசூரிய ஆராச்சிகே லஹிரு என்ற மாணவன், இன்று திக்குவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட லஹிருவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சைட்டம் நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரிடம் இருந்த கமெராவின் சிப்பை பறித்ததாக லஹிருக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.