பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் பேயாட்டத்தை கண்டு மாணவிகள் அஞ்சி ஓட்டம்

வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.school

மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். கொல்லன்னாவை பிரச்சினை பற்றி பேச்சுக்களை ஆரம்பித்து வழமை போல பாராளுமன்றத்தை குழுப்புவதே கூட்டு எதிரணியின் முயற்சியாக அமைந்திருந்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.