ஈரான் நாடு சில தினங்களுக்கு முன்பு ராக்கெட் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை முயற்சி என்று அமெரிக்கா தெரிவித்தது. இருப்பினும் இந்த சோதனையில் ஈரான் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை முயற்சி நடத்தியதாக ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்துள்ளது.
வடகொரியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் கருவூலத் துறை இந்த தடையை பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே, தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகள் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.