காலே டெஸ்ட்: இலங்கைக்கு 550 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது இந்தியா

காலே டெஸ்டில் இலங்கைக்கு 550 ரன்களை வெற்றி இலக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்ணையித்துள்ளது.
kale
காலே,
இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் கடற்கரை நகரான காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை  அணி 291 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. காயம் காரணமாக குணரத்னே பேட் செய்ய வரவில்லை. தில்ருவான் பெரேரா 92 ரன்களுடன் (132 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
பின்னர் இலங்கைக்கு ‘பாலோ-ஆன்’ கொடுக்காமல் 309 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. முதல் இன்னிங்சில் செஞ்சுரி போட்ட ஷிகர் தவானும் (14 ரன்), புஜாராவும் (15 ரன்) இந்த முறை சீக்கிரம் நடையை கட்டினர். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் விராட் கோலி 76 ரன்களுடன் (114 பந்து, 5 பவுண்டரி) களத்தில் இருக்கிறார்.
4-வது நாள் இன்று துவங்கியது விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அடித்த 17-வது சதம் இதுவாகும். இந்திய அணி 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து இருந்த போது, டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 550 ரன்கள் நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 99 ரன்களுக்கு மேல் எந்த அணியும் இலக்கை வெற்றிகரமாக துரத்திப்பிடித்தது (சேசிங்) கிடையாது என்பதால், முதல் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.