சென்னை மெரீனாவில் போலீஸ் குவிப்பு

MEREENAA

சென்னை: ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடவுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து விவேகானந்தர் இல்லம் முன்பாக வழக்கத்தை விட அதிகமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். 100 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், பெண்கள் தங்கள் பகுதியில் விளைந்த காய்கறிகள் மற்றும் இளநீர், பலா, வாழைத்தார், பப்பாளி உள்பட கனிகளை இலையில் படையலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைகளில் பதாகைகளை ஏந்தி, ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எனினும் கிராம மக்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.

இதனிடையே மெரீனா கடற்கரை சாலையில் 200க்கும் மேற்பட்டட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று நெடுவாசல் கிராம மக்களுக்காக போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடவுள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியுள்ளது. இதனையடுத்து வழக்கத்தை விட அதிகமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் திறக்க போராடியவர்கள் மெரீனாவில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மூடக்கோரி மெரீனாவில் திரண்டு விடக்கூடாது என்பதில் சென்னை நகர காவல்துறையினர் படு கவனமாகவே உள்ளனர்.