முன்னாள் தலைவி சமரி அத்­த­பத்­துவை இங்கிலாந்து அணி அழைப்பு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்­த­பத்­துவை தங்கள் அணியில் இணைந்து விளை­யா­டு­மாறு இங்­கி­லாந்தின் முன்­னணி அணி­யான யோக் ஷையர் அணி அழைப்பு விடுத்­துள்­ளது.

SAMARI1

இங்­கி­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள முதல்­தர கிரிக்கெட் அணி­க­ளுக்­கிடையிலான இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்­கேற்­கவே சம­ரிக்கு மேற்­படி அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இங்­கி­லாந்தில் அண்­மையில் நடை­பெற்று முடிந்த மகளிர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான லீக் போட்டி ஒன்றில் சமரி அத்­த­பத்து ஆட்­ட­மி­ழக்­காது 178 ஓட்­டங்­களை விளா­சினார்.

சம­ரியின் இந்த துடுப்­பாட்டம் அனை­வ­ரையும் ஈர்த்­தது. அதே­வேளை அவர் குவித்த 178 ஓட்­டங்கள் ஒருநாள் போட்டி ஒன்றில்

குவித்த அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை யாகவும் பதிவானது.

இந்நிலையிலேயே சமரிக்கு இங்கிலாந் தின் யோக் ஷையர் அணி அழைப்பு விடுத்துள்ளது.