பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடம்

bill-gatesஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் இன்று பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பல வருடங்களாக இப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் இன்று 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இந்தப் பின்னடைவு சுமார் 4 மணிநேரம் நீடித்தது. இதன் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில்கேட்ஸ் மீண்டும் தனது ஆஸ்தான முதல் இடத்தை 89.8 பில்லியன் டாலர் மதிப்புடன் பிடித்தார்.

ஜெப் பீசோஸ்

ஜெப் பீசோஸ்

நேற்று உலகமும் முழுவதிலும் தலைப்பு செய்தியென்றால் அது ஜெப் பீசோஸ் பற்றித்தான்.

பில்கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி சுமார் 4 மணிநேரம் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சுகத்தை அனுபவித்த ஜெப் பீசோஸ் 88.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 2வது இடத்திற்குச் சரிந்தார்.

3வது இடம்

3வது இடம்

அமான்சியோ ஓர்டிகோ 83.1 பில்லியன் டாலர் மதிப்புடன் 3வது இடத்தையும் பிடித்தார்.

4வது இடம்

4வது இடம்

சில மாதங்களுக்கு முன்பு 2வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் அதிகளவிலான நன்கொடையின் காரணமாகத் தற்போது 74.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளார்.

நம்ம தல..

நம்ம தல..

5வது இடத்தில் இன்றைய நாயகன் மார்க ஜூக்கர்பெர்க் 70.9 பில்லியன் டாலருடன் உள்ளார்.