தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் – ஜனாதிபதி

myதனக்கு தேவையானால் நாளைய தினமே புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும், ஆனால் குப்பையான அரசாங்கத்தை அமைக்க தான் தயாரில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியன ஜனாதிபதி தலைமையில் நேற்று இரவு கூடிய போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் தூய்மையற்ற அரசாங்கமாக இருந்ததன் காரணமாகவே தான் அதில் இருந்து வெளியேறியதாகவும் தற்போதுள்ள இடம் அசுத்தமானது என்றால் தன்னால் அந்த இடத்தில் இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் அமைப்பதாக இருந்தால் அது தூய்மையான அரசாங்கமாக இருக்குமே அன்றி அசுத்தமான அரசாங்கமாக இருக்காது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.