விராட் கோஹ்லியை பதவி விலக வலியுறுத்தும் பி.சி.சி.ஐ

viraat

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பன்னாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ( ONGC)  நிறுவனத்தின் முகாமையாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வலியுறுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பதவியிலிருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை  மேற்படி வலியுறுத்தியுள்ளது.

விராட் கோஹ்லி மாத்திரமன்றி அணியின் சக வீரர்களான ரஹானே, புஜாரா, இசாந் ஷர்மா, ரோஹித் ஷர்மா உட்பட 100 இந்திய வீரர்கள் தமது பதவிளை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை வலியுறுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் பதவியிலிருப்பதால் வீரர்களுக்கு இந்திய கிரிக்கட் மீது ஆர்வம் குறைந்து வருவதாக நீண்டகாலமாக கூறப்பட்டுவருகின்றது. சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி கோன்ற இந்திய முன்னாள் வீரர்களும் இத்தகைய விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.