நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.
அலங்கார கந்தன் வெளிவீதி உலா வரும் அற்புத காட்சியை காண பெருந்திரளான பக்தர்கள் அங்கு கூடியுள்ளனர்.
இதன்போது, உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பக்தர்களும் பெருமளவில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள நல்லூர்பெருந்திருவிழா மகோற்சவமானது நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.