நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர பிரபல சோதிடர் நல்ல நேரத்தையும் கணித்து கொடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 20 பேர் தயாராக உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன ஒரு பொய்யர் எனவும் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கும், நில அளவை திணைக்களத்தை அமெரிக்காவுக்கும், அஞ்சல் துறையை இந்தியாவுக்கும் விற்பனை செய்ய அலரி மாளிகையில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு முடித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.