நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை முடிவுக்கு வரும்வரை டீசல் மூலமான மின் உற்பத்தி நிலையங்களினூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை மின்சார சபைக்கு 3,800 கோடி ரூபா மேலதிக பணம் செலவிட வேண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் 38 சதவீதம் தாழ்ந்துள்ளது.
இந்த நிலையில், டீசல் மூலம் இடம்பெறும் மின் உற்பத்தி 80 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செலவுகளை ஏற்றாலும், மின்சாரத்தை தொடர்ந்து வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.