யாழில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பலி..!

death

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் புகையிரதக் கடவையைக் கடக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதத்துடன் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்தபோது புகையிரதக் கடவையை கடந்துசெல்ல முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரத்தில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் வடலியடைப்புப் பண்டைதரிப்பைச் சேர்ந்த சிங்காரம் சிவச்செல்வன் என்ற 59 வயது குடும்பஸ்தரே பரிதாபகமாக உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.