யாழ்ப்பாணம் நகரம், கைலாசபிள்ளையார் ஆலய நாற்சந்தியில் இன்று இரவு பத்து முப்பது மணியளவில் வாகன விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நாவலர் வீதி வழியாக வந்துகொண்டிருந்த காரும், கோவில் வீதி வழியாக வந்துகொண்டிந்த ஹயஸ் வானும் கைலாயப் பிள்ளையார் கோயில் நாற்சந்தியில் விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் காரில் வந்துகொண்டிருந்த வைத்தியரும் அவரது குடும்பத்தினரும் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்களும் எந்தவித பாதிப்பும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். மேலும், காரின் முன் பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.