வித்தியா கொலை வழக்கில் பிரபல அரசியல்வாதி! இளஞ்செழியனை இலக்கு வைப்பதில் மறைந்துள்ள மர்மங்கள்?

தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கில் கடந்த ஒரு வார காலமாக பரபரப்பாக பேசப்பட்ட விடயம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம், எவராலும் மறக்க முடியாத ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்ற விடயமாகவே பார்க்க முடிகின்றது.

தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் முதன்முறையாக மாற்று சிந்தனையை நீதிபதி இளஞ்செழியன் விதைத்துள்ளார்.

நேர்மையை விதைத்து வைத்தவருக்கு எதிரிகள் இலக்கு வைப்பது ஒன்றும் புதிது கிடையாது. இருந்தாலும் தென்னிலங்கையில் மக்கள் மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் ஏன் இடம்பிடித்துள்ளார்.

அண்மையில் சூடுபிடித்துள்ள வித்தியா கொலை வழக்கே நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் இதன் பின்னணியில் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அரசியல்வாதியின் மறைமுகத் தாக்குதலாக கூட இருக்கலாம். அல்லது வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர்களின் திட்டமிடப்பட்ட சதிச் செயலாக இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் பலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.