மும்மொழி அமுலாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்த அரச நிறுவனங்களுக்கு சுமார் 3000 அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என்று தேசிய நல்லிணக்கத்துறை அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் தாம் முன்வைத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரிகளை நியமிக்காது மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது கடினமான பணியாகவே இருக்கும் என்று அவர் ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார்.
கல்விப்பொதுத்தராதர உயர்தர சித்திகளுடன் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமைப்பெற்றவர்கள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்
இதேவேளை, நியமனங்களின் பின்னர் இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.