ஆலயத்தில் காவலாளியாக கடமையுரியும் நபர் வியாழக்கிழமை இரவு கோவிலை பார்த்த போதே பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த அம்மனுக்குரிய சேலை உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடப்பதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து பார்த்த போது அதனுள்ளிருந்த சுமார் 4 அரைப் பவுணுக்கு அதிகமான தங்க நகைகள் களவு போயிருப்பதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவிக்கின்றது.