சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு ஒன்றின் விலை 200 ரூபா­யளவில் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அரச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

gas

 

சமையல் எரிவாயுவின் விலை அதி­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் கம்­ப­னிகள் வாழ்க்கைச் செலவு குழு­விடம் கோரிக்கை விடுத்­த­போதும் இந்த கோரிக்கை தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் இது­வரை விலை அதி­க­ரிப்­பது குறித்து எது­வித தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யெனவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

குறிப்­பாக கேஸ் கம்­ப­னிகள் நன்­மை­ய­டை­வதும் உலக சந்­தையில் சமையல் எரிவாயுவின் விலை அதி­க­ரித்­துள்­ளது மற்றும் அமெ­ரிக்க டொலரின் பெறு­மதி அதி­க­ரித்துள்­ள­மையும் சமையல் எரிவாயுவின் விலையை அதி­க­ரிக்கும் படி கோரிக்கை விடுக்கக் கார­ண­மாக அமைந்­துள்­ளது.

சமையல் எரிவாயுவின் விலையை அதி­க­ரிக்கும் படி கேஸ் கம்­ப­னிகள் விடுத்த கோரிக்கை குறித்து கடந்த வாரம் அமைச்­ச­ர­வை­யிலும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது. இறு­தி­யாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவால் குறைக்­கப்­பட்­டது. தற்போது கொழும்பு நகரில் 12.5 கிலோ கேஸ் சிலிண்டர் 1321 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.