கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேசங்களில் பெய்து வரும் அடை மழை காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது
குறிப்பாக எட்டியாந்தோட்டை, அம்பகமுவ, கிதுல்கல, வௌல்வத்தை பிரதேசத்தில் 75 – 78 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மண் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அப்பிரதேச மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பாரிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான, ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக தென் மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்