ஐ.நா. சபையின் போர் நிறுத்த தீர்மானங்களை மீறி வடகொரியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வடகொரியாவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது. பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: வடகொரியாவிடம் சீனா வலியுறுத்தல் பீஜிங்: கொரிய தீபகற்ப பகுதியில் போர் நிகழாமல் தடுப்பதற்கான தீர்மானங்கள் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி வடகொரியா தொடர்ந்து இப்பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்திவருகிறது. இந்த வகையில், நேற்று (வெள்ளிகிழமை) வடகொரியா கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக கூறியிருந்தது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா,
சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் வடகொரியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வடகொரியாவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சீனாவும் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடன்படிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, போர் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை உடனடியாக வடகொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளது.